நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் வழக்கம் போல் ஆர்சிபி சொதப்புவிட்டதாக அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஏலத்திற்கு முன்பு தங்களிடம் இருந்த முன்னணி பவுலர்களை விடுவித்த ஆர் சி பி அணி இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டிஸின் அல்ஸாரி ஜோஸப்பிற்கு 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.  

Advertisement

அதேபோன்று நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபர்குசனுக்கு இரண்டு கோடியும், டாம் கரனுக்கு ஒன்றரை கோடி ரூபாயும் ஆர்சிபி அணி கொடுத்திருக்கிறது. இதேபோன்று இந்திய  வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாளுக்கு 5 கோடி ரூபாய் ஆர்சிபி அணி கொடுத்திருக்கிறது. இந்த பவுலர்களை வைத்து சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி அடி வாங்க போகிறது என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் வியூகம் குறித்து பேசி உள்ள அந்த அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “கடந்த சீசனின் போது நாங்கள் உள்ளூர் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஏனெனில் கடந்த சீசனில் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றோம்  தற்போது சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் இந்த ஏலத்தில் நாங்கள் முயற்சி செய்தோம். இந்த மினி ஏலத்தில் எவ்வாறு அணியை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பணிகளை மேற்கொண்டோம். உள்ளூர் மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்களை தேடி நாங்கள் ஏலத்தை அணுகினோம். 

ஆர்சிபி அணி குறித்து தான் பல மணி நேரம் நான் கடந்த இரண்டு மாதமாக பேசி இருக்கிறேன். அணியை பலமாக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதலில் யோசிக்க வேண்டும். அனைத்து பிரிவும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த ஏலத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News