நான் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகன் - ஷாருக் கான்!

Updated: Wed, Dec 20 2023 13:26 IST
Image Source: Google

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி 7.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஷாருக் கானை மீண்டும் அணியில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி சற்று ஆர்வம் காட்டினாலும், ஷாருக் கானிற்காக விடாப்பிடியாக போராடிய குஜராத் டட்டன்ஸ் அணி அவரை இறுதியாக 7.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுவிட்டதால் அவரது இடத்தில் விளையாட வைக்க ஷாருக் கானை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ஷாருக் கான், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷாருக் கான், “நான் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகன். நான் கடந்த 10 வருடமாகவே டேவிட் மில்லரின் பெரிய ரசிகன். இக்கட்டான பல பெரிய போட்டிகளை கூட டேவிட் மில்லர் கூலாக முடித்து கொடுப்பார். டேவிட் மில்லருடன் ஒன்றாக இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் குஜராத் அணிக்காகவும், தென் ஆப்ரிக்கா அணிக்காகவும் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 

அடுத்த தொடரில் குஜராத் அணிக்காக விளையாட நான் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். குஜராத் அணி என்னை 6 அல்லது 7வது இடத்தில் களமிறக்கும் என நான் கருதுகிறேன். எந்த இடத்தில் களமிறக்கப்பட்டாலும் நான் எனது வேலையை சரியாக செய்து கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. குஜராத் அணிக்காக என்னால் பந்துவீச்சில் பங்களிப்பு அளிக்க முடியும் என நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை