இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!

Updated: Sat, Oct 04 2025 19:13 IST
Image Source: Google

இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதேசமயம் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணைக்கேப்டனாக ஷுப்மன் கில்லும் தொடர்கின்றனர். இதுதவிர சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் தூபே, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்ஸர் படேல், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஹர்ஷதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::