ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ!

Updated: Tue, Jul 02 2024 23:00 IST
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதில் கேகேஆர் அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடப்பு சீசன் முடிவடைந்துள்ள நிலையி, அடுத்த ஐபிஎல் தொடருக்கான விவாதத்தில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் அணிகளின் விருப்பங்கள் குறித்த தகவல் இன்று வெளியாறியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மேகா ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதேசமயம், இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக ரூ.120 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ஏலத்தொகையின் உச்சவரம்பாக ரூ.100 கோடி மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரிடென்ஷன் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்வதற்கு அணிகளிடம் ஆலோசனை கேட்கபட்டது. இதில் ஒரு சில அணிகள் ரிடென்ஷன் முறையில் 8 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் 5 முதல் 7 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் அனைத்து வீரர்களும் ஏல முறையில் மட்டுமே வாங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு இம்பேக்ட் பிளேயர் விதியும் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடக உரிமை வைத்திருப்பவர்கள் இதில் திருப்தி அடைந்துள்ளனர், ஆனால் பயிற்சியாளர்கள் இந்த விதியால் அதிகம் ஈர்க்கப்படவில்லை. இருப்பினும் இறுதி முடிவானது ஏலத்தின் போது தான் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் ஊடக உரிமை வைத்துள்ளவர்கள் இந்த விதியை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதால் நிச்சயம் இந்த விதிமுறையானது அடுத்த ஐபிஎல் தொடரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை