தோனிக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Sun, Mar 17 2024 13:03 IST
தோனிக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளையும் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்தார். 

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்ட்ல் 100 போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைகளை படத்ததற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்துகொண்டுனர். 

இவ்விழாவில் முன்னாள் பிசிசிஐ தலைவரான என் சீனிவாசன், 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனைக்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 1 கோடி காசோலை வழங்கி கௌரவித்தார். அதுமட்டுமின்றி தங்க நாணயங்களால் உருவாக்கப்பட்ட நினைவு பரிசும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், “2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அவர்தான், சீனிவாசனுக்கு என்னை சிபாரிசு செய்தார். அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. அத்தொடரில் நான் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான மேத்யூ ஹைடன், எம்எஸ் தோனி, முத்தையா முரளிதரன் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு கி்டைத்தது. 

அத்தொடரில் தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை எல்லா வழியிலும் ஊக்கப்படுத்தினார். புதிய பந்தில் கெயிலுக்கு என்னை பந்துவீச அழைத்தார். தோனி கொடுத்த அந்த ஒரு வாய்ப்புக்காக நான் எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன்.அடுத்து 2013ல் என்னை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றார்கள். ஆனால், தோனி தான் கடந்த சீசனில் அஸ்வின் தான் தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார். 

அவர் அணியில் இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் பற்றி எல்லா வித்தைகளையும் தெரிந்தவர் அனில் கும்ப்ளே. யாருடைய மனதையும் புண்படுத்தாதவர். அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அவருக்கு பிறகு தற்போது ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் அதிக நேரங்கள் செலவிட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை