இனி தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தடை; ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Updated: Fri, Aug 02 2024 15:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கிய்ள்ளன. மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கல் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது.

இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர், இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்ட போது, அவர்கள் பின்னர் தொடரிலிருந்து விலகினர். 

சில வீரர்கள் குறைந்த ஏலத்தொகை காரணமாகவும், சிலர் காயங்கள் மற்றும் சிலர் குடும்ப காரணங்களுக்காகவும் போட்டியில் விளையாட மறுத்திருந்தனர். இதன் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து சொந்த காரணத்திற்காக வெளியேறினால் அவர்களை தடை செய்ய வேண்டும் என பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏனெனில் அணி நிர்வாகங்கள் தங்களுடைய அணித்தேர்வை உருவாக்குவதற்காக ஏலத்தில் நிறைய முயற்சிகளை போடுகின்றன. ஆனால் சில வீரர்கள் ஏலத்தின் இறுதியில் குறைந்த தொகைக்காக வாங்கப்பட்டதற்காக தொடரில் இருந்து விலகிவருவது அணியின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் அந்த அணியின் பிளேயிங் லெவனிலும் பல மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளதாகவும் உரிமையாளர்கள் கருதுகின்றனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

பல முறை அடிப்படை விலைக்கு வாங்கிய வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு தங்கள் பெயரைத் திரும்பப் பெறுவதால், உரிமையாளர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனால் இனிவரும் ஐபிஎல் தொடர்களில் காயங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக தொடரின் பாதியில் விலகும், அல்லது ஆரம்பத்திலேயே விலகும் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வேண்டும் என்று அனைத்து உரிமையாளர்களும் ஒருசேர முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை