ஐபிஎல் மெகா ஏலம் 2022: விக்கெட் கீப்பர்களை வாங்க ஆர்வம் காட்டிய அணிகள்!

Updated: Sat, Feb 12 2022 17:17 IST
Image Source: Google

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

இதில் விக்கெட் கீப்பர்களுக்கான ஏலம் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேடை எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. 

அடுத்தாக அம்பத்தி ராயூடுவை ரூ.6.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு மும்பை, பஞ்சாப், ஹைதாராபத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வில மும்பை - ஹைதராபாத் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.25 கோடிகளுக்கு மீண்டும் தங்கள் அணியில் எடுத்துள்ளது. 

அதன்பின் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு பஞ்சாப் அணியும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ரூ.5.50 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.

மற்றொரு இந்திய வீரர் விருத்திமான் சஹா, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

அடுத்தாக வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரானை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடும் போட்டிகளுக்கு பிற்கு ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை