அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்லினில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மதவெரே 21 ரன்களிலும், மருமணி 11, சகப்வா 10, மையர்ஸ் 1, எர்வின் 15 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மில்டன் ஷும்பா - ரியான் பர்ல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்டன் ஷும்பா 46 ரன்களையும், ரியான் பர்ல் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கெட்கேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.