அயர்லாந்த் வீரர் நெய்ல் ராக்கிற்கு கரோனா - மாற்று வீரராக ஸ்டீபன் டோஹேனி தேர்வு!

Updated: Sun, Jul 11 2021 13:22 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகாள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று டப்லினில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள நெய்ல் ராக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஸ்டீபம் டோஹேனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நெய்ல் ராக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ கணகாணிப்பில் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் அவருக்கு மாற்று வீரராக ஸ்டீபன் டோஹேனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானால், நாளை தினம் சக அணி வீரர்களுடன் அவர் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை