அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
Ireland vs West Indies 3rd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லியாம் மெக்கர்த்தி 4 ஓவர்களில் 81 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 256 ரன்களைக் குவிக்க, பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களில் 194 ரன்களை மட்டுமே எடுத்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அயர்லாந்து அணி தரப்பில் பந்துவீசிய அறிமுக வீரர் லியாம் மெக்கர்த்தி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 4 ஓவர்களை வீசிய நிலையில் அதில் விக்கெட்டுகள் ஏதுமின்றி 20.20 என்ற எகானமியில் 81 ரன்களைக் கொடுத்திருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு உறுப்பினர் நாட்டின் வீரராக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகில் ஒரு வீரரின் இரண்டாவது மோசமான பந்துவீச்சாகவும் இது அமைந்தது. முன்னதாக காம்பியாவின் மூசா ஜோபார்டே கடந்த் 2024ஆம் அண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசியதுடன் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் 93 ரன்கள் கொடுத்ததே இதுவரை முதலிட்த்தில் உள்ளது. அந்த வரிசையில் தற்சமயம் லியாம் மெக்கர்த்தியும் இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை கொடுத்து பந்து வீச்சாளர்கள்(ஒரு இன்னிங்ஸில்)
0/93 (4) - மூசா ஜோபார்டே vs ஜிம்பாப்வே, 2024
0/81 (4) - லியாம் மெக்கார்த்தி vs வெஸ்ட் இண்டீஸ், 2025*
0/75 (4) - கசுன் ராஜிதா vs ஆஸ்திரேலியா, 2019
1/72 (4) - கிறிஸ் சோல் vs நியூசிலாந்து, 2022
இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பல்கேரியாவுக்கு எதிரான தனது முதல் டி20 சர்வதேச போட்டியில் செர்பியாவின் மைக்கேல் டோர்கன் 4 ஓவர்களில் 66 ரன்களைக் கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், மெக்கர்த்தி அதனை முறியடித்துள்ளார்.
அறிமுக டி20ஐ போட்டியில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்
Also Read: LIVE Cricket Score
0/81 (4) - லியாம் மெக்கார்த்தி vs விண்டீஸ், 2025*
1/66 (4) - மைக்கேல் டோர்கன் vs பல்கேரியா, 2021
1/64 (4) - ஜேம்ஸ் ஆண்டர்சன் vs ஆஸ்திரேலியா, 2007