அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 57 ரன்களை எடுத்தார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் -ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டிர்லிங் 43 ரன்னிலும், பால்பிர்னி 34 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் 22.2 ஓவர்களில் அயர்லாந்து அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய வில்லியம் போர்ட்டர்ட்ஃபீல்ட் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.