அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பெல்ஃபெஸ்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - பெல்ஃபெஸ்ட் மைதானம்
  • நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

ஆஃப்கானுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி பேட்டிங், பவுலிங் என இரு தரப்பிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது. 

அதிலும் பேட்டிங்கில் கேப்டன் பால்பிர்னி, லோர்கன் டக்கர், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் அருமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். பந்துவீச்சில் ஜார்ஜ் டெக்ரேல், ஜோஸுவா லிட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியில் உஸ்மான் கானியைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேலும் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் அசத்தும் பட்சத்தில் இனி வரும் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • ஆஃப்கான் வெற்றி - 14
  • அயர்லாந்து வெற்றி - 5
Advertisement

உத்தேச அணி

அயர்லாந்து- பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்.

ஆஃப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கானி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - லோர்கன் டக்கர்
  •      பேட்டர்ஸ் - ஆண்டி பால்பிர்னி, ஹாரி டெக்டர், உஸ்மான் கானி, ஹஸ்ரதுல்லா ஜசாய்
  •      ஆல்-ரவுண்டர்கள் - பால் ஸ்டிர்லிங், முகமது நபி
  •      பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், பேரி மெக்கார்த்தி, முஜீப் உர் ரஹ்மான், ஜோசுவா லிட்டில்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News