அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையெயான நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி அசத்தலான வெற்றியைப் பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜூலை 24) பெல்ஃபெஸ்ட்டில் நடைபெறுகிறது. 

Advertisement

ஏற்கெனவே இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்துள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்போடு இப்போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
  •     இடம் - சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபெஸ்ட்
  •     நேரம் - இரவு 8.30 மணி

நேருக்கு நேர்

  •     மொதிய ஆட்டங்கள் - 2
  •     தென் ஆப்பிரிக்க வெற்றி -2
  •     அயர்லாந்து வெற்றி - 0

உத்தேச அணி

Advertisement

அயர்லாந்து - ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர், ஷேன் கெட்கேட், சிமி சிங், மார்க் அதிர், கிரேக் யங், ஜோசுவா லிட்டில்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ஜேன்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர்,வியான் முல்டர், ஜோர்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி.

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  •     பேட்ஸ்மேன்கள் - பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி, ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர்
  •     ஆல்ரவுண்டர்கள் - மார்க் அதிர், ஜார்ஜ் டோக்ரெல், வியான் முல்டர்
  •     பந்து வீச்சாளர்கள் - ஜோசுவா லிட்டில், தப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ன் ஃபோர்டுயின்.
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News