ஜிம்பாப்வே மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு ஏமி ஹண்டர் மற்றும் ரபேக்கா ஸ்டோக்கல் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஏமி ஹண்டர் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

Advertisement

அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஏமி ஹண்டர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ரபேக்கா ஸ்டோக்கலும் 45 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் லூயிஸ் லிட்டில் 22 ரன்களையும், லாரா டெலானி 19 ரன்களையும், ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திருபினர். அந்த அணியில் கேப்டன் சிப்போ முகேரி-டிரிபனோ 39 ரன்களையும், பிஸா 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் ஜிம்பாப்வே மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஏவா கன்னிங் மற்றும் சோஃபி மெக்மோஹன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News