உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆஃப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஃப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிஷங்கா 46 ரன்கள் அடித்தார். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.

Advertisement

ஆஃப்கானிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 242 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் பெற்ற 3ஆவது வெற்றி இதுவாகும். அந்த அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று இலங்கைக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் பெற்ற வெற்றியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்ஃபான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News