புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் பந்துவீசி அசத்திய இஷான் கிஷான் - வைரலாகும் காணொளி!
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷான் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறது. இதில் ஹைதராபாத் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் பந்துவீசிய நிகழ்வானது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அறியப்படும் இஷான் கிஷன் தற்போது பந்துவீச்சிலும் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளார். இந்த போட்டியில் இஷான் கிஷான் இரண்டு ஓவர்கள் வீசி, அதில் அவர் ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனாலும் அவர் தனது பந்துவீச்சில் விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. இந்நிலையில் இஷான் கிஷான் பந்துவீசும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை இஷான் கிஷான் ஏற்க மறுத்தார்.
மேற்கொண்டு அவர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து இஷான் கிஷன் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.
மேலும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்றுள்ள முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணியில் புது ஆல் ரவுண்டர்களை உருவாக்கி வருகிறார். அந்தவரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரோஹித் சர்மா, ரியான் பராக் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் ஒருசில ஓவர்களை வீசியுள்ளனர். இந்நிலையில் அதனை மனதில் வைத்து இஷான் கிஷானும் தனது பந்துவீச்சில் கவனம் செலுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy