டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

Updated: Thu, May 30 2024 11:49 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இத்தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஜூன் 5ஆம் தேதி தங்களுடையை முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது ஜூன் 09ஆம் தேதி நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஒவ்வொரு முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான். அதிலும் உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோது போட்டிக்கு கூடுதல் ஆதரவு இருக்கும். ஏனெனில் இரு நாட்டுக்கு இடையே இருக்கும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை.

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல், ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தீவிரவாத தக்குதல் நடத்த உள்ளதாக தீவிரவாத குழு ஒன்றி மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இப்போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். மேற்கொண்டு இத்தொடரில் இந்த மைதானத்தில் மட்டுமே 9 போட்டிகள் நடைபெறவுள்ளதால் அனைத்து போட்டிகளுக்குமான பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் போன்ற மிகப்பெரும் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை