வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் அண்மையில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவுடனான சந்திப்புக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றார். உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலும் இடம்பெற்றார். இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனான மோதல் காரணமாக அவர் உலகக் கோப்பையிலிருந்து விலகினார்.

Advertisement

இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலிருந்து விலகிய தமிம் இக்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மேலிட அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். நீங்கள் காயத்துடன் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதைக் காட்டிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட வேண்டாம் என்று கூறினார். 

Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டிக்கு இன்னும் 12-13 நாள்கள் உள்ளன. அதற்குள் நான் முழு உடல் தகுதியுடன் இருப்பேன் என்றேன். அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் முதல் போட்டியில் விளையாடினாலும் பேட்டிங் ஆர்டரில் வேறு இடத்தில் மாறி இறங்க வேண்டியிருக்கும் என்றார். என்னுடைய 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பேட்டிங் ஆர்டர் வேறு இடத்தில் மாறி இறங்கியதே இல்லை. 

அவர்கள் கூறுவதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். நான் பல விஷயங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்ந்தேன். இதுபோன்ற எண்ணங்கள் இருந்தால் என்னை உலகக் கோப்பை தொடருக்கு அனுப்பாதீர்கள். நான் உங்களது இந்த குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் எண்ணத்துக்குள் வர விரும்பவில்லை. எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஷாகிப் அல் ஹசன், “ரோஹித் சர்மா போன்ற ஒருவர் தனது கேரியரை நம்பர் 7இல் இருந்து தொடக்க ஆட்டக்காரராக உருவாக்கினார். நம்பர் 4இல் பேட் செய்தால் பிரச்சனையா? அணி தோல்வியடைந்து 100 ரன் எடுத்தால் தனிப்பட்ட சாதனைகளை வைத்து என்ன செய்வீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News