தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே

Updated: Wed, Jun 02 2021 22:10 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் இந்திய அணி ஒருநாள், டி20  உலக கோப்பைகளை கைப்பற்றியும், ஐசிசியின் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

மேலும் இவரது தலைமையின் இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற்றினார். அதேசமயம் முன்னாள் கேப்டனான தோனி உலகின் தலைசிறந்த ஃபினிஷராக ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் பிரபலமானவர். 

இப்படி சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த தோனியை விக்கெட் கீப்பராக முதலில் கண்டுபிடித்தவர் முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே. இந்நிலையில் தோனி அணிக்கு தேர்வானது குறித்து கிரண் மோரே தற்போது சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கிரண் மோரே,“இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் வடிவம் மாறிக்கொண்டிருந்த போது பேட்டிங் வரிசையில் 6, 7ஆவது இடத்தில் களம் இறங்கி அதிரடி காட்டுபவராக இருக்க வேண்டும் என எண்ணினோம். அப்போது தான் தோனியை உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 தாக இருந்த நிலையில் தோனி மட்டும் 130 ரன்களை விலாசி இருந்தார். இதை பார்த்து நான் வியப்படைந்தேன்.

இதைத்தொடர்ந்து தோனிக்கு அணியில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கங்குலியிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப்தாஸ் குப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார்.

பின்னர் கங்குலியை சமாதானப்படுத்த எங்களுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது. தோனிக்காக நான் அவருடன் 10 நாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை