ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன் - ஜோ ரூட்!

Updated: Tue, Nov 22 2022 10:16 IST
Image Source: Google

மாடர்ன் டே கிரிக்கெட்டின் ஃபேப்4 வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். தற்போது 31 வயதான அவர் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 

இதுவரை 124 டெஸ்ட், 158 ஒருநாள் போட்டிகளில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்கள் உட்பட 10,504 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 வீரரும் அவர்தான்.

இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022 சீசனின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லி அவர் ஏலத்தில் பங்கேற்கவில்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். அதில் இடம் பெறுவது சிறப்பானதாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது நல்லதொரு வெளிப்பாடாக இருக்கும் என கருதுகிறேன். 

இந்த ஃபார்மெட்டில் இருந்து நானே என்னை அந்நிய படுத்திக் கொண்டேன். இப்போது அதில் விளையாட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஓய்வு குறித்து நான் அறவே எதுவும் சிந்திக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை