ரோஹித் - டிராவிட் கூட்டணி நிச்சயம் இதை செய்யும் - சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை
இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆக போகிறது. ஐசிசி தொடரை கடைசியாக 2013ஆம் ஆண்டு தான் வென்றது.
இந்த காரணத்துக்காகவே விராட் கோலி தனது கேப்டன் பதவியை இழந்தார். தற்போது ரோஹித் சர்மா, டிராவிட் கூட்டணி இந்திய அணியை கட்டமைக்க உள்ளது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “உலகக் கோப்பையை இந்தியா வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் உட்பட நம் நாட்டில் உள்ள அனைவரும் இந்தியா உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள்.
ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பைக்காக தான் விளையாடுவார்கள். அனைத்து தொடரை விட மிக முக்கியம் வாய்ந்தது உலகக் கோப்பை தான். அதற்கு தான் சொல்கிறேன், ரோஹித், டிராவிட் கூட்டணி தான் நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு என நம்புகிறேன்.
அவர்கள் தங்களது பணியை செய்யும் போது, அவர்களுக்கு தேவையான ஆதரவு சரியான நேரத்தில் கிடைக்கும் போது அனைத்துமே சாத்தியம். ஆனால் அது எளிதாக இருக்காது. டிராவிட் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதனால் இந்த பயணத்தில் ஏற்ற தாழ்வு நிச்சயம் இருக்கும் என்பதை டிராவிட் அறிவார்.
இதனால் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முன்னேறி சென்றால், இந்த கூட்டணி நமக்கு உலகக் கோப்பையை வென்று தரும்” என்று கூறினார்.