ஷுப்மான் கில்லின் ஆட்டத்தைப் பார்த்து நான் நிறைய வளர்ந்திருக்கிறேன்: சாய் சுதர்சன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
புள்ளிப்பட்டிளின் ஆடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துவாரா என்ற எதிர்பர்ப்புகள் அதிகரித்துள்ளது. இத்தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர், 504 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய சாய் சுதர்ஷன், “இந்த மூன்று வருடங்களாக நான் எப்போதும் ஷுப்மான் கில்லுடன் அதிகம் உரையாடி வருகிறேன். வலைகளில் எனக்கு சிரமம் இருந்தால் அல்லது யாரையாவது எதிர்கொள்வதில் சிரமம் இருந்தால், என்னால் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்பது அவருடன் உரையாடுவேன். அவர் விளையாடுவதைப் பார்த்து நான் நிறைய வளர்ந்துள்ளேன்.
மனரீதியாக, அவர் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கேப்டன். மேலும் வீரருக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்துகொள்கிறார். சிரமங்களை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அவர் எப்போது ஆலோசனைகளை வழங்குவார். இதன்மூலம் வீரர்கள் வலுவாக மீண்டு வர முடியும். மைதானத்திலும் நாங்கள் நிறைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்த சீசனிலும் நாங்கள் அழகான நினைவுகளை உருவாக்குகிறோம் என்று நம்புகிறேன்.
ரன்கள் எடுப்பது, அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது, நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அதைச் செய்வது என ஆகியவை மூலமாக தான் வீரர்கள் அணிக்கு பங்களிப்பு செய்ய முடியும். உங்கள் அணியை இலக்கை தாண்டும் அளவுக்கு நீங்கள் சீராக செயல்படுவது தான் மிக முக்கியமான விஷயம். அதற்காக ஆரஞ்சு தொப்பியைப் பற்றி நீங்கள் நினைத்தால், உங்கள் திறன் குறைந்துவிட்டதாக நான் உணர்கிறேன். ஏனெனில் தனிப்பட்ட விருப்பங்கள் உங்களை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்த முயற்சிக்கும்.
Also Read: LIVE Cricket Score
ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அனைத்து துணை ஊழியர்கள் மற்றும் அணியினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன், அவர்கள் முதல் வருடத்திலிருந்தே என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். ஏனென்றால் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த அணிக்காக விளையாடினாலும், உங்கள் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கும் போது அதை அணிக்குத் திருப்பித் தரும் பொறுப்பும் உங்களிடம் இருக்கும். எந்த அணியாக இருந்தாலும் அதுதான் மிக முக்கியமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.