இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 
இரண்டாவது டி20 போட்டி  இன்று எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் கண்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Advertisement

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் இணை களமிறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 15 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய விராட் கோஇயும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து 30 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இந்திய அணி 150 ரன்களையாவது எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சவலான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 ரன்களைச்சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட்ன் கிலென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News