ஐபிஎல் 2023: புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்! 

Updated: Sat, May 20 2023 13:52 IST
Image Source: Google

16ஆவது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பஞ்சாப்பின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும்,  கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரான் 49 ரன்களும், ஷாருக் கான் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த தேவ்தத் படிக்கல் 51 ரன்களும், சிம்ரன் ஹெட்மயர் 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது. 

பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் தங்களது அடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்பிற்கான திறவு கோளாக அமையும். இந்தநிலையில், கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த ஜெய்ஸ்வால், இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியின் மூலம் நடப்பு தொடரில் 620 ரன்களை கடந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இதன் மூலம் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச அணிக்காக விளையாட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சேன் மார்ஸ் 616 ரன்கள் எடுத்திருந்த இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இதனை 15 ஆண்டுகளுக்கு ஜெய்ஸ்வால் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச அணிக்காக விளையாடாத வீரர்கள் பட்டியல்:

  • 620 – ஜெய்ஸ்வால் (2023)*
  • 616 – சேன் மார்ஸ் (2008)
  • 516 – இஷான் கிஷன் (2020)
  • 512 – சூர்யகுமார் யாதவ் (2018)
  • 480 – சூர்யகுமார் யாதவ் (2020)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை