சச்சினை பின்னுக்குத்தள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!

Updated: Thu, Sep 02 2021 20:20 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அந்த சாதனை யாதெனில் இதுவரை சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 94 போட்டிகளில் பங்கேற்று தன்வசம் வைத்திருந்தார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து மண்ணில் அவரது 95 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இதன்மூலம் சச்சினின் சாதனையை முறியடித்து இவர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

  • ஜேம்ஸ் ஆண்டர்சன் – 95
  • சச்சின் டெண்டுல்கர்– 94
  • ரிக்கி பாண்டிங் – 92.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை