அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
James Neesham Unwanted Record: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் டாக் அவுட்டானதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 75 ரன்களையும், பெவான் ஜேக்கப்ஸ் 44 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் 35 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரண்மாக அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நிஷம் டக் அவுட்டானதன் மூலம் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அந்தவகையில் நியூசிலாந்து அணியில் டி20 வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ஜேம்ஸ் நீஷம் பெற்றுள்ளார். டி20 போட்டியில் அவர் 7வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த அணியின் முன்னாள் வீரர் காலின் டி கிராண்ட்ஹோமின் சாதனையையும் முறியடித்தார்.
Also Read: LIVE Cricket Score
இது தவிர, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் ஆகியோரது சாதனைகளையும் சமன்செய்துள்ளார். முன்னதாக விரட் கோலி மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் தலா 7 முறை டக் அவுட்டானதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஜிம்மி நீஷமும் 7ஆவது முறையாக டக் அவுட்டாகி அவர்களின் சாதனையை சமன்செய்துள்ளார்.