சதமடித்து இங்கிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!

Updated: Fri, Aug 23 2024 21:39 IST
Image Source: Google

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 236 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களிலும், அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பசீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜேமி ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியானது 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக இளம் வயதில் சதமடித்து அசத்திய முதல் விக்கெட் கீப்பர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

முன்னதாக கடந்த 1930ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் லெஸ் அமெஸின் 24 வயது 64 நாள்களில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜேமி ஸ்மித் 24 வயது 42 நாள்களில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தியதுடன், லெஸ் அமெஸின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை