பர்மிங்ஹாம் டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜேமி ஸ்மித்!

Updated: Fri, Jul 04 2025 22:19 IST
Image Source: Google

Jamie Smith Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித் 184 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமத்தில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்இத் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன் 300 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் ஹாரி புரூக் 158 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜேமி ஸ்மித் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதமடித்து அசத்தியதன் மூலம், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 86 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஜேமி ஸ்மித் முறியடித்துள்ளார். 

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் வேகமான சதங்கள்

  • ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) - 80 பந்துகள், பர்மிங்ஹாம் (2025)*
  • கபில் தேவ் (இந்தியா) - 86 பந்துகள், கான்பூர் (1982)
  • அசாருதீன் (இந்தியா) - 88 பந்துகள், லார்ட்ஸ் (1990)
  • பென் டக்கெட் (இங்கிலாந்து) - 88 பந்துகள், ராஜ்கோட் (2024)
  • ரிஷப் பந்த் (இந்தியா) - 89 பந்துகள், பர்மிங்காம் (2022)

ஜேமி ஸ்மித்தின் சதம் இந்தியாவுக்கு எதிரான வேகமான டெஸ்ட் சதமாக மட்டுமல்லாமல், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது வேகமான சதமாகவும் அமைந்தது. அவருக்கு முன், கில்பர்ட் ஜெசாப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மட்டுமே இங்கிலாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் 77 பந்துகளுக்குள் சதம் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஸ்மித் இப்போது ஹாரி புரூக்குடன் இணைந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக சதமடித்த வீர்ர்கள்

  • கில்பர்ட் ஜெஸ்ஸாப் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 76 பந்துகள், தி ஓவல் (1902)
  • ஜானி பேர்ஸ்டோவ் - நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகள், நாட்டிங்ஹாம் (2022)
  • ஹாரி புரூக் - பாகிஸ்தானுக்கு எதிராக 80 பந்துகள், ராவல்பிண்டி (2022)
  • ஜேமி ஸ்மித் - இந்தியாவுக்கு எதிராக 80 பந்துகள், பர்மிங்காம் (2025)*
  • பென் ஸ்டோக்ஸ் - நியூசிலாந்துக்கு எதிராக 85 பந்துகள், லார்ட்ஸ் (2015)
  • இயன் போத்தம் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 பந்துகள், லீட்ஸ் (1981)

மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 184 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 1997ஆம் ஆண்டு அலெக் ஸ்டீவர்ட் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஜேமி ஸ்மித் முறியடித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்

  • 184* - ஜேமி ஸ்மித் vs இந்தியா, பர்மிங்ஹாம், 2025*
  • 173 - அலெக் ஸ்டீவர்ட் vs நியூசிலாந்து, ஆக்லாந்து, 1997
  • 167* - ஜானி பேர்ஸ்டோ vs இலங்கை, லார்ட்ஸ், 2016
  • 164 - அலெக் ஸ்டீவர்ட் vs தென் ஆப்பிரிக்கா, மான்செஸ்டர், 1998
  • 152 - ஜோஸ் பட்லர் vs பாகிஸ்தான், சவுத்தாம்ப்டன், 2020
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை