6,6,6,0,6: ஷஃபாஸ் அஹ்மத் ஓவரை பிரித்து மேய்ந்த ஜேசன் ராய்!

Updated: Wed, Apr 26 2023 20:35 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மாத்தார்.

அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய - நாரயண் ஜெகதீசன் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் ஆமை வேகத்தில் உயர்ந்தது. அதனை மேலும் கட்டுப்படுத்து விதமாக வநிந்து ஹசரங்கா கேகேஆர் அணியின் பேட்டிங்கை தனது அபார பந்துவீச்சின் மூலம் சோதித்தார். 

அதன்பின் பவர்பிளேவின் கடைசி ஓவரை ஷஃபாஸ் அஹ்மத் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஜேசன் ராய் அதுவரை பொறுமைகாத்தது போதும் என்பது போல அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசி எதிரணியை ஸ்தம்பிக்கவைத்தார். அந்த ஓவரில் மட்டும் கேகேஆர் அணி 25 ரன்களைச் சேர்த்தது. 

 

இந்த அதிரடியின் மூலம் ஜேசன் ராய 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாட முயன்ற ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஜேசன் ராய் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை