களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மிட்டனர். இதில் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரியும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பியூ வெப்ஸ்டர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் அதன்பின் மேற்கொண்டு ஓவர்கள் ஏதும் வீசாமல் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் களத்திற்கு திரும்பாமல் இருந்ததால், அவர் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. அதன்பின் அவர் தனது பயிற்சி உடையை அணிந்து அணி ஊழியர்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருப்பதாகவும், அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பும்ரா காமடைந்திருப்பது உறுதியானது இந்திய அணிக்கு அது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மற்ற இந்திய பந்துவீச்சாளர் சோபிக்க தவறிவரும் நிலையில், பும்ராவும் காயம் காரண்மாக பந்துவீச முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதுதவிர்த்து அடுத்த மாதம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவரால் இடம்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் அதிகரிக்கும். இருப்பினும் பும்ராவின் காயம் குறித்த முழுமையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.