ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஜஸ்ப்ரித் பும்ராவின் யார்க்கர் - வைரல் காணொளி!

Updated: Sat, Feb 03 2024 14:50 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸ்லில் 396 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியாக தொடங்கினாலும், பென் டக்கெட் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த ஸாக் கிரௌலியும் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஒல்லி போப் - ஜோ ரூட் இணை ஜோடி சேர்ந்தனர். இதில் ஜோ ரூட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் கடந்த போட்டியில் 196 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஒல்லி போப் இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

பின் இப்போட்டியில் 23 ரன்கள் எடுத்திருந்த ஒல்லி போப், ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய அபாரமான யார்க்கர் பந்தை கணிக்க தவறினார். இதனால் பந்து நேராக ஸ்டம்பை தாக்கியதுடன், அதனை சில அடி தூரத்திற்கும் தூக்கி எறிந்தது. இந்நிலையில் ஒல்லி போப் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை