ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா!

Updated: Thu, Jan 02 2025 12:29 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அதன்படி, இப்போட்டியில் பும்ரா மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ள ஹர்பஜன் சிங்கின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்து புதிய சாதனையை படைக்கவுள்ளார். 

இதற்கு முன் கடந்த 2000 மற்றும் 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளின் முடிவில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை எட்டுவார். இந்த மைல் கல்லை அவர் எட்டும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த சாதனையை படைக்கும் 8ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். இதுவரை ஜஸ்பிரித் பும்ரா 203 போட்டிகளில் 242 இன்னிங்ஸ்களில் விளையாடி 441 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை