ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Mon, Aug 08 2022 21:45 IST
Jasprit Bumrah Ruled Out Of Asia Cup 2022 (Image Source: Google)

ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.

பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட நாள்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியின் போது காயமடைந்த ஹர்சல் படேல், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு முன் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறினார்.

காயத்தில் இருந்து ஹர்சல் பட்டேல் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அதேபோல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சில போட்டிகளிலும் விளையாட வாய்ப்புகள் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய வீரர்களில் ஒருவரான ஹர்சல் பட்டேல் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்சல் பட்டேல் விலகினால் தீபக் சாஹருக்கு இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என தெரிகிறது. 

ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தில் அவதிப்பட்டு வரும் தீபக் சாஹர், மிக சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்தது மட்டுமே இந்திய அணிக்கு நிகழ்ந்த ஒரே நல்ல விசயமாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாது போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கூடுதல் பந்துவீச்சாளராக தீபக் சஹால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ராவும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை தற்போது பிசிசிஐ உறுதிசெய்துள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும் அவர்களுக்கு தற்போது பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை