அடுத்தடுத்து யார்க்கர்கள் மூலம் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்க்க, இறுதில் நமன் தீர் 25 ரன்களையும், கார்பின் போஷ் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது அற்புதமான யார்க்கர் பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதிலும் பும்ரா தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் அப்துல் சமத் மற்றும் அவேஷ் கான் ஆகியோரை க்ளீன் போல்டாக்கி அசத்தினார். மேலும் அவர் இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக லக்னோ அணியில் இன்னிங்ஸில் மிகப்பெரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
Also Read: LIVE Cricket Score
அதன்படி இப்போட்டியின் 16ஆவது ஓவரை பும்ரா வீசிய நிலையில், அந்த ஓவரின் 5ஆவது பந்தில் அப்துல் சமத்தையும், ஓவரின் கடைசி பந்தில் ஆவேஷ் கானையும் என அடுத்தடுத்து தனது யார்க்கர் பந்துகளின் மூலம் க்ளீன் போல்டாக்கி மிரட்டினார். இதுதவிர்த்து அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அதிரடி பேட்டர் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.