ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப்- வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் பேட்டர்களை க்ளீன் போல்டாக்கிய காணொளிகள் வைரலாகி வருகின்றன. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக்கப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் தனது இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்திலேயே தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸியை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார்.
இதில், ஜெய்டன் சீல்ஸ் வீசிய குட் லெந்த் பந்தை தடுக்க முயன்ற ஸோர்ஸி அதனை தவறவிட, அது ஸ்டம்புகளை தாக்கியது. இதனால் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஸோர்ஸி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ரம், கைல் வெர்ரைன் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோரது விக்கெட்டுகளை க்ளீன் போல்ட் முலம் கைப்பற்றினார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதிலும் அவர் வெர்ரைனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தந்து 5 விக்கெட் ஹாலையும் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக 5 விக்கெட் ஹாலை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.