மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ் அரைசதம்; இலங்கைக்கு 150 டார்கெட்!

Updated: Sat, Oct 01 2022 14:49 IST
Image Source: Google

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர், இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோட்ரிக்ஸ் அரைசதமும் கடந்தார்.

அதன்பின் மறுமுனையில் இருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களோடு அவரும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரெகர் ஆகியோரும் சொற்ப ரன்களோடு நடையைக் கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிஸ் 76 ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை