ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5ஆவது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Advertisement

ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் பங்குபெறவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்துக்காக என்னுடைய பெயரைத் தரவில்லை. அணிக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தியாகம் செய்யத் தயார். இந்த அணிக்காக நிறைய செய்யவேண்டியுள்ளது. அதற்காக என்னுடைய ஆற்றல் தேவைப்படுகிறது. என் நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நான் மிகவும் அக்கறை கொள்கிறேன். அணி எந்த இடத்தில் இருக்கவேண்டும் என விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஜோ ரூட் புதுமுகம் தான். 2018 ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News