லார்ட்ஸ் டெஸ்டில் பாடம் காற்றுக்கொண்டோம் - ஜோ ரூட்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தொடரின் மூன்றாவது போட்டி வரும் நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி தோல்வியிலிருந்து நல்ல பாடம் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரூட்“லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நல்ல பாடம் கற்றோம். அந்த போட்டியில் சில விஷயங்களை நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்க வேண்டும் என கருதுகிறேன். இதை நான் அந்த போட்டி முடிந்தவுடனும் சொல்லி இருந்தேன். இந்த தொடரில் இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. நிச்சயம் எங்களால் வலுவாக கம்பேக் கொடுக்க முடியும் என நம்புகிறேன்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
விராட் கோலி மற்றும் அவரது அணியினர் எப்படி விளையாடுவார்களோ அப்படி விளையாடி உள்ளனர். இப்போது எங்களது இயல்பான ஆட்டத்தை நாங்கள் விளையாடியாக வேண்டும். களத்தில் என்ன நடந்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.