ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன் ஒருபகுதியாக இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக ஜேமி ஓவர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இம்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதானமாக தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய செதிகுல்லா அடல் 4 ரன்னிலும், ரஹ்மத் ஷா 4 ரன்னிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 37 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது ஒரே ஓவரில் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இன்னிங்ஸில் 5ஆவது ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது முதல் பந்திலேயே ரஹ்மனுல்லா குர்பாஸை க்ளீன் போல்டாக்கினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய செதிகுல்லா அடல் தனது இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், அந்த ஓவரின் 5ஆவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையாத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அதில் ரஷித், மார்க் வுட்
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மதுல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபாருக்கி.