Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறின.

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SEC vs JSK, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
  • இடம் -  சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானம், செஞ்சூரியன்
  • நேரம் - பிப்ரவரி 03,  இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

SEC vs JSK Pitch Report

இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் தலா 9 முறை வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 176 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 253 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட ஏதுவாக இருக்கும்.இதனால் நிச்சயம் இப்போட்டியில் வான வேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SEC vs JSK: Where to Watch?

Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEC vs JSK Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் – டெவான் கான்வே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (துணைக்கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜோர்டான் ஹார்மன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ராம், மார்கோ ஜான்சன் (கேப்டன்), டோனோவன் ஃபெரீரா
  • பந்து வீச்சாளர்கள் - ஹார்டுஸ் வில்ஜோன், கிரெய்க் ஓவர்டன், லூத்தோ சிபாம்லா.

Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Probable Playing XI

Advertisement

Sunrisers Eastern Cape Probable Playing XI : டேவிட் பெடிங்ஹாம், டோனி டி ஸோர்ஸி, ஜோர்டான் ஹர்மன், ஐடன் மார்க்ராம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டாம் அபெல், மார்கோ ஜென்சன், லியாம் டாசன், கிரெய்க் ஓவர்டன், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.

Joburg Super Kings Probable Playing XI: டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), லூஸ் டு ப்ளூய், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சிபோனெலோ மக்கன்யா, டோனோவன் ஃபெரீரா, ஹார்டஸ் வில்ஜோன், மஹீஷ் தீக்ஷனா, தப்ரைஸ் ஷம்சி, லூதோ சிபம்லா.

SEC vs JSK Dream11 Prediction, SEC vs JSK Dream11 Team, Today Match SEC vs JSK, SA20 2025, Fantasy Cricket Tips, SEC vs JSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Sunrisers Eastern Cape vs Joburg Super Kings

Advertisement

Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News