அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!

Updated: Sat, Jul 09 2022 10:53 IST
Kapil Dev makes big statement on ‘struggling’ Virat Kohli (Image Source: Google)

இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. 

தேர்வுக்குழுவின் இந்த முடிவைப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் அஸ்வின் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி ஒன்றில் , "உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கினால், உலகின் நம்பர் 1 பேட்டரையும் (ஒரு காலத்தில்) நீக்கியிருக்க வேண்டும். ஆம், விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கோலியின் பேட்டிங் முன்புபோல் இல்லை. நீங்கள் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களை வெளியில் அமர வைப்பது நல்லதல்ல.

ப்ளேயிங் லெவன் என்பது தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, கடந்தகால செயல்பாடுகளை வைத்து எடுக்கக்கூடாது. நம்மிடம் நிறைய ஆப்ஷன் இருக்கும்போது சிறப்பான அணியை கட்டமைக்க வேண்டியது அவசியம். வெஸ்ட் இண்டீஸ் உடனான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை நாம் அவரை கழட்டிவிடப்பட்டதாகக்  கூட எடுத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை