இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்!
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருன் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருண் நாயர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மேலும் இந்தியாக்கா விளையாட வேண்டும் என்ற பசி தன்னை சிறப்பாக செயல்பட தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒதுகுறித்து பேசிய கருண் நாயர், “வெளிப்படையாக, இந்தியாவுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு உங்கள் மனதில் இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாட விரும்பினால், கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். மனதில் இந்த யோசனைகளும் கனவுகளும் உள்ளன, ஆனால் அது வெறும் உத்வேகம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் போது, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கருண் நாயரின் செயல்திறன் குறித்து தேர்வாளர்கள் விவாதித்ததாகவும், ஆனால் தற்போது அவர் அணியில் இடம் பெறுவது கடினம் என்றும் கூறினார். இருப்பினும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது யாராவது ஃபார்மை இழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, அவர் மாற்று வீரராக வைக்கப்படுவார் என்று அவர் உறுதியாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி இருந்தது. இருப்பினும் இறுதிப்போட்டியில் அந்த அணியால் கர்நாடகா அணியை வீழ்த்த முடியாமல் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் இத்தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).