கேசிஎல் 2025: கம்பீர், சூர்யாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் சஞ்சு; அடுத்தடுத்து அரைசதம் விளாசி அசத்தல்!

Updated: Thu, Aug 28 2025 19:58 IST
Image Source: Google

Sanju Samson: திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிரான கேசிஎல் லீக் போட்டியில் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 62 ரன்களை கடந்து அசத்தினார். 

கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் திருவனந்தபுரம் ராயல்ஸ் மற்றும் கொச்சி புளூ டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் - மனோகரன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மனோகரன் 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய சாலி சாம்சனும் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, மறுபக்கம அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்த தொடரில் அவர் தனது மூன்றாவது 50+ ரன்களையும் கடந்து அசத்தினார்.

அதன்பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிகில் 45 ரன்களையும், ஜோபின் ஜோபி 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கொச்சி புளூ டைகர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. திருவனந்தபுரம் அணி தரப்பில் அபிஜித் பிரவின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் கோவிந்த் தேவ், ரியா பஷீர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிருஷ்ண பிரசாத் - சஞ்சீவ் சதீஷ்வரன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சஞ்சீவ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் கிருஷ்ண் பிரசாத் 36 ரன்களிலும், சஞ்சீவ் சதீஷவரன் 70 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அப்துல் பசித் 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொச்சி புளூ டைகர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியில் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரை கடந்து அவரால் தொடக்க வீரர் இடத்தைப் பிடிப்பாரா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை