தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!

Updated: Wed, Nov 10 2021 20:38 IST
Image Source: Google

இம்மாத இறுதியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 26ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் நவம்பர் 28ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. 

அதேசமயம் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் சென்சூரியனிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜஹனெஸ்பார்க்கிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான 16பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் கேசவ் மகாராஜ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: T20 World Cup 2021

தென் ஆப்பிரிக்க: கேசவ் மகராஜ் (கேப்டன்), டேரின் டுபாவில்லன், ஜுபைர் ஹம்சா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசாண்டா மாகலா, ஜென்மேன் மாலன், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்ஸி, கைல் வெர்ராய்ன், லிசாட் வில்லியம்ஸ், காயா சோண்டோ.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை