தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போது 33 வயதை மட்டுமே எட்டிவுள்ள கிளாசென் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,  “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாகும். எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் அதே நேரத்தில் நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், தனது சக வீரர் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவுள்ளதாக கூறிவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அவர் அநேகமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் அஞ்சப்படும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் தற்சமயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய செய்தியானது வருத்தமளிக்கிறது. 

அவன் இன்னும் இளமையான வீரராக உள்ளார். அதிலும் குறிப்பாக என்னை விட சிறியவர். இருப்பினும் நாம் அவருடைய முடிவை மதித்து வாழ்த்து கூற வேண்டு. ஏனெனில் அவருக்கு அதற்காக காரணங்கள் இருக்கும். அதனை நாம் மதித்தாக வேண்டும். இவரின் ஓய்வு காரணமாக தற்சமயம் அணியின் மிகப்பெரும் வெற்றிடம் உள்ளது. அவர் ஓய்வை அறிவித்திருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் நமக்கு ஆதரவாஇ வழங்குவார்” என்று கூறிவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமான ஹென்ரிச் கிளாசென் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்களையும், 60 ஒருநாள் போட்டிகளில் 2141 ரன்களையும், 58 டி20 போட்டிகளில் 1000 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் தற்போதைய தென்னாப்பிரிக்க அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிவுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News