ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!

Updated: Tue, Jun 20 2023 17:52 IST
Kevin Pietersen credits IPL 2023 behind Joe Root's innovative shots (Image Source: Google)

இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரம் ரண்களைக் கடந்து சச்சின் சாதனையை முறியடிக்கும் வகையில் மிக வேகமாக ரண்களை திரட்டி மிக அபாரமாக விளையாடி வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் அவர் 13 சதங்களை தாண்டி அடித்திருக்கிறார் இந்த வகையில் இது ஒரு உலக சாதனையாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவாகி இருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் அணுகி வருகிறது. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லாத் துறையிலும் அதிரடியாகவே இங்கிலாந்து விளையாடுகிறது.

ஒட்டுமொத்த அணியினரும் தாக்குதல் பாணியில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணியில் மிக ஒழுக்கமான பேட்டிங் முறைகளை கொண்டிருக்கும் ஜோ ரூட்டும் அதிரடியான முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். டி20 கிரிக்கெட்டிலேயே பல வீரர்கள் விளையாடாத ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் அனாயசமாக விளையாடி ஆச்சரியப்படுத்துகிறார். 

அவரது அணுகுமுறை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் இன்னும் உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. நடந்து வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது நாளின் முதல் பந்திலேயே இப்படியான ஷாட்டை விளையாட போய் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “ஜோ ரூட்டுக்கு வானமே எல்லையாக இருக்கின்றது. அவரது புத்திசாலித்தனமான செயல்பாட்டு முறைகள் வேறு எதற்குமே கிடையாது. அவரிடம் 11,000 டெஸ்ட் ரன்கள் இருக்கிறது நிறைய சதங்கள் இருக்கிறது அடுத்த நாள் காலையில் ஒரு ஆட்டத்தில் அவர் மிகவும் இயல்பாக கால்பந்து பயிற்சியில் இருக்க முடியும்.

ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார். எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த மாஸ்டரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது தொடரட்டும். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு மாதங்கள் அவர் பணியாற்றியது அவர் இந்த மாதிரி விளையாடுவதில் நிறைய அழுத்தமான மாற்றங்களை உருவாக்கி இருக்கும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை