WPL 2023: குஜராத் ஜெஅண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்நே ராணா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - பிரபோர்ன் கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியில் மேகனா, சோபியா டங்க்லி, ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட் போன்ற அதிரடி பேட்டர்கள் இருக்கும் படச்த்திலும் அந்த அணியால் வெற்றியை ஈட்ட முடியாமல் தடுமாறி வருகிறது.
பந்துவீச்சு துறையில் ஸ்நே ரானா, கிம் கார்த், மான்ஸி ஜோஷி, தனுஜா கன்வர் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் குஜராத் ஜெயண்ட்ஸ் இப்போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் மறுபக்கம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி மீது பெரும் எதிபார்ப்பு இருந்த நிலையில் அந்த அணி முதலிரண்டு போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களை பெரும் எமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.
ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஹீதர் நைட் போன்ற பேட்டர்களையும், ரேனுகா சிங், பிரீத்தி போஸ், மேகான் ஷூட் போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ள நிலையிலும் அந்த அணியில் வெற்றியை ஈட்டமுடியாமல் தடுமாறி வருவது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
மேலும் இன்றைய போட்டி மகளிர் தினத்தன்று நடைபெறுவதால் ரசிகர்களுக்கு இலவச அனுமதியை பிசிசிஐ அளித்துள்ளது. இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
உத்தேச லெவன்
குஜராத் ஜெயண்ட்ஸ் - சப்பினேனி மேகனா, சோபியா டாங்க்லி, சுஷ்மா வர்மா, ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், ஸ்னே ராணா (கே), கிம் கார்த், மான்சி ஜோஷி, தனுஜா கன்வார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ், ஹீதர் நைட், கனிகா அஹுஜா, மேகன் ஷட், ஷ்ரேயங்கா பாட்டீல், ப்ரீத்தி போஸ், ரேணுகா தாக்கூர் சிங்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ்
- பேட்டர்ஸ் – ஸ்மிருதி மந்தனா, ஹீதர் நைட், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா
- ஆல்-ரவுண்டர்கள் - எலிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த்
- பந்துவீச்சாளர்கள் - மேகன் ஷட், ரேணுகா சிங் தாக்கூர், ஜார்ஜியா வேர்ஹாம்