கேகேஆர் அணியில் இருந்து விலகிய சந்திரகாந்த் பண்டித்!

Updated: Tue, Jul 29 2025 21:44 IST
Image Source: Google

Indian Premier League: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளார் பரத் அருண் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸுடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்த அளவில் சிறப்பாக செயல்பட தவறியதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகள் இரண்டு முடிவில்லை என மொத்தமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் தற்சமயம் அந்த அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கான வேலைகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் மற்றும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தங்களின் பொறுப்புகளில் இருந்து விலகுவதக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கேகேஆர் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்திரகாந்த் பண்டிட் புதிய வாய்ப்புகள் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது தலைமையின் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர்சாம்பியன் பட்டத்தை வென்றது, மற்றும் வலுவான, உறுதியான அணியை உருவாக்க உதவியது உள்ளிட்ட அவரது விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

Also Read: LIVE Cricket Score

அவரது தலைமைத்துவமும் ஒழுக்கமும் அணியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்ட சந்திரகாந்த் பண்டித் தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் அணியின் வெற்றிக்கு உதவியதுடன், சிறப்பான அணியையும் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை