ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகின்றது. 

Advertisement

10 போட்டிகளின் முடிவில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. அதேசமயம் 10 போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெறுவது கட்டாயம். 

Advertisement

அந்த அவகையில் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கடந்த போட்டியில் காலில் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக பென் கட்டிங் அல்லது டிம் சேய்ஃபெர்ட் ஆகிய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் தான் டெல்லி அணி ஆடியது. இந்த போட்டியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் அல்லது ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்படலாம்.

உத்தேச அணி விவரம்

கேகேஆர்: ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், பென் கட்டிங்/டிம் சேய்ஃபெர்ட், சுனில் நரைன், ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோட்ர்ஜே, ஆவேஷ் கான்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News