கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!

Updated: Tue, Jan 18 2022 19:54 IST
KL Rahul becomes first Indian ODI captain to make his debut on South African soil (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று முடிந்த வேளையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக முதன் முறையாக ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் செயல்பட இருக்கிறார். ஏற்கனவே இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியின்போது டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் கேப்டனாக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து கேஎல் ராகுல் தற்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தினால் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியையும் வழிநடத்த இருக்கிறார். நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் இந்த ஒருநாள் தொடரிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 29 வயதான கேஎல் ராகுல் இந்திய வீரர்கள் யாரும் செய்யாத ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக மாற இருக்கிறார். அந்த சாதனை யாதெனில் நாளைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் அறிமுகமாகும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டனாக மாறுவார். அதுமட்டுமின்றி வேறு எந்த ஒரு வீரரும் கேப்டனாக தங்களது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க மண்ணில் விளையாடியது கிடையாது.

இதற்கு முன்னர் ஷிகர் தவான் மற்றும் ரஹானே ஆகியோர் வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது கேப்டனாக அறிமுகமாகியிருந்தாலும் தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமாகவில்லை.

தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக மாறியிருக்கும் ராகுல் தனது பேட்டிங்கில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கேப்டனாகவும் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை